எங்கேயோ சென்றிருந்தோம்,
எத்தனையோ பிழை செய்தோம்.!
செல்லும் இடமெல்லாம் பின் வந்தாய்,
என்றென்றும் எங்கள் கை பிடித்தாய்.!
செய்த பிழையாவும் மாற்றிவிதாய்,
திருந்தாத மனதையும் திருந்தச் செய்தாய்!
சோதனைகள் பல கொடுத்தாய் - அதில்
தோற்ற போதெல்லாம் தட்டிக் கொடுத்தாய்!
கேட்பதையெல்லாம் கொடுத்திடுவாய்,
எனினும் அது தீயது என்றால் தடுத்திடுவாய்,
தடுத்த போதெல்லாம் கோவம் கொண்டேன்,
இருந்தும் நன்மையையே நீ அருளிடுவாய்!
உடும்பென உம் பாதம் பிடித்தோம்,
உண்மையாவும் நாம் உணர்ந்திடுவோம்,
உன்னையே நம்பயுள்ளோம் - நிச்சியம்
நன்மையாவும் பெற்றிடுவோம்.
ஏங்கும் மனமெல்லாம் நீ வாழ,
பார்க்கும் பார்வையாவும் நீயாக,
எண்ணும் எண்ணமெல்லாம் நீ நிறைய,
என்றென்றும் உன்னையே துதித்திருப்போம்!.
மனதை ஆட்சி செய்த மதிகூட, புரிந்துகொண்டது
"நான் யார்" என்பதை.
மாயையில் மயங்கியிருந்த மனமும், தெரிந்துகொண்டது
"நான் யார்" என்பதை.
ம்ம்ம்....
உம் எளிய நடையும், எளிய முறையும்,
யாருக்குத் தான் புரியாது! :)
எத்தனை கோடி பிறவிகள் எடுத்தோமோ,
அதில் எத்தனை கோடி புண்ணியம் செய்தோமோ,
உன்னைப் போல் ஒரு குரு கிடைக்க! :)
எத்தனை கோடி நன்றி சொல்லினும்,
எங்கள் கடன் தீராதது!
ஆத்மா நமஸ்தே!
1 comment:
tamil thandavamaduthu......
nice one :-)
Post a Comment